இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவை அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த தென்னிலங்கை அரசியல்வாதிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான் ஒருபோதும் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என சங்கக்கார தனது உத்தியோகபூர்வ வலைத்தள பக்கமொன்றில் அறிவித்திருந்தார்.
எனினும் அவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதில் பிரபல அரசியல்வாதிகள் சிலர் கடுமையான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.