குருநாகல், மாவத்தகமையில் வைத்து 65 வயதான வர்த்தகர் ஒருவர் மீது, இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஸ்தலத்திலேயே அவர், பலியாகியுள்ளார். மோட்டார் சைக்கிளில் வருகைதந்த இனந்தெரியாத நபர்களே, அவர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.