முல்லைத்தீவு மாவட்டம் குமுழமுனை – தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலைக்கு, பொதுமக்கள், மதம் சார்ந்தவர்கள் எவரும் செல்வதற்கு தடைவித்திக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் தற்காலிகமாக பிறப்பித்துள்ளது.
கடந்த 04ஆம் திகதியன்று குருந்தூர் மலைப் பகுதியில் புத்தர் சிலை ஒன்றை அமைக்கும் நோக்குடன் பிக்குமார் உள்ளிட்ட 12 பேர் சென்றபோது,அப்பகுதி , பிரதேச இளைஞர்கள் மக்கள் இணைந்து தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு சென்ற ஒட்டுசுட்டான் பொலிஸார் ச குறித்த பிக்குமார் உள்ளிட்ட 12 பேரையும் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர்.
இதன்போது குருந்தூர் மலையில் முன்னர் இருந்த விகாரை தொடர்பில் ஆய்வு செய்வதற்காக தாங்கள் சென்றதாக பிக்குமார் கூறியுள்ளனர்.
இதன் பின்னர் குறித்த பிக்குகள் உள்ளிட்ட 12 பேரையும் பொலிஸார் விடுவித்துள்ளார்கள்.
அதோடு குருந்தூர் மலைக்கு பொதுமக்கள் மதம் சார்ந்தவர்கள் எவரும் செல்வதற்கு தடை விதிக்க கோரியும் கடந்த 05ஆம் திகதி அன்று நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்கள்.
இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணை, கடந்த வியாழக்கிழமை (06) நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே , எதிர்வரும் 13ஆம் திகதி வரை குறித்த மலைக்கு எவரும் செல்லகூடாதென தற்காலிக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த விடயம் தொடர்பிலான வழக்கு விசாரணையும் 13ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நீதவான் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.