குறைமாதக் குழந்தையின் உயிரைக்காக்க செயற்கை நச்சுக்கொடி!

ஒவ்­வொரு வரு­டமும் உலகில் குறை­மா­தத்தில் சுமார் 15 மில்­லியன் குழந்­தைகள் பிறப்­ப­தா­கவும் அவற்றில் சுமார் ஒரு மில்­லியன் குழந்­தைகள் மேற்­படி பிறப்பால் ஏற்­படும் உடல்­நல பிரச்­சி­னை­களால் உயி­ரி­ழந்து வரு­வ­தா­கவும் உலக சுகா­தார ஸ்தாபனம் தெரி­விக்­கி­றது.
இந்­நி­லையில் மேற்­படி குறை மாதத்தில் பிர­ச­வ­மாகும் குழந்­தை­க­ளுக்கு தாயின் கருப்­பையில் இருப்­பதைப் போன்ற நிலை­மையை ஏற்­ப­டுத்தி அவற்றின் உயிரைக் காப்­பாற்ற செயற்கை நச்சுக் கொடி­யொன்றை வடி­வ­மைத்­துள்­ள­தாக அமெ­ரிக்க ஆய்­வா­ளர்கள் உரி­மை­கோ­ரி­யுள்­ளனர்.
மனி­தர்­களால் உரு­வாக்­கப்­பட்ட இந்த நச்சுக் கொடி பம்­பி­யொன்றைப் பயன்­ப­டுத்தி செயற்கை நுரை­யீரல் ஒன்­றி­னூ­டாக குரு­தியை அனுப்பி சுத்­தி­க­ரித்த பின் அதனை குழந்­தையின் குருதிச் சுற்­றோட்­டத்­திற்கு அனுப்­பு­கி­றது.
அத்­துடன் அந்த நச்சுக் கொடி காற்­றோட்ட இயந்­தி­ரத்தின் உத­வி­யின்றி குழந்தைக்குத் தேவை­யான வளி­யையும் பரி­மாற்றம் செய்­கி­றது.
வழ­மை­யான பிர­ச­வங்கள் சுமார் 40 வார காலம் வரை நீடிக்­கின்ற நிலையில், கருத்­த­ரித்து 37 வாரத்­துக்கு முன் பிறக்கும் குழந்­தைகள் உயி­ரா­பத்தை எதிர்­கொண்டு வரு­கின்­றன.
மேற்­படி பிரச்­சி­னைக்கு தீர்வு காணும் முகமாக மிக்சிக்கன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த செயற்கை நச்சுக் கொடியை வடிவமைத்துள்ளனர்.

ஆய்வாளர்கண்டுபிடிப்புகருத்தரிப்புகருப்பைகுறைமாதம்குழந்தைநச்சுக்கொடிபல்கலைக்கழகம்பிரசவம்
Comments (0)
Add Comment