குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க விசாரணைகள் நடத்தியே ஆக வேண்டுமாம்!

இது­வரை எப்­போதும் கிடைக்­கா­தி­ருந்த சர்­வ­தேச சமூ­கத்தின் ஒத்­து­ழைப்பை நாம் பெற்­றுள்ளோம். இன்று உலகில் அத்­தனை நாடு­க­ளையும் நாம் எமது நேசநாடு­க­ளாக மாற்­றி­யுள்ளோம். இது நாம் பெற்­றுக்­கொண்ட மிகப்­பெ­ரிய வெற்­றி­யாகும் என்று ஸ்ரீலங்கா ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்துள்ளார்.

கடந்த வருடம் ஜனா­தி­பதித் தேர்­தலை பிர­க­ட­னப்­ப­டுத்­தா­தி­ருந்தால் முன்னாள் ஜனா­தி­ப­தியே தற்­போதும் ஜனா­தி­ப­தி­யாக இருந்­தி­ருப்பார். நாட்­டுக்­குள்ளும் சர்­வ­தே­சத்­திலும் ஏற்­பட்­டி­ருந்த சவால்­க­ளுக்கு முகம் கொடுக்க முடி­யாத நிலை அன்று ஏற்­பட்­டி­ருந்­தது. இத­னால்தான் விடை காண முடி­யாத பிரச்­சி­னை­க­ளுக்கு விடை காணும் வகையில் அவ­சர தேர்தல் ஒன்றை பிர­க­ட­னப்­ப­டுத்தும் நிலை அன்­றைய ஜனா­தி­ப­திக்கு ஏற்­பட்­டது. ஆனாலும் ஆட்­சிக்கு வந்த நாம் கடந்த அர­சாங்­கத்­தினால் விடை கூற­மு­டி­யா­தி­ருந்த வினாக்­க­ளுக்கும் விடை­ய­ளித்­துள்ளோம் என்றும் மைத்திரி  சுட்­டிக்­காட்­டினார்.

சர்­வ­தேச ரீதியில் எமது நாட்­டுக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு பதி­ல­ளிக்க வேண்­டு­மாயின் எமது நாட்­டின்­மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு பதி­ல­ளிக்க வேண்­டு­மாயின் எமது நாட்­டின்­மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்றச்சாட்டுக்குள்கு உரிய முறையில் விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மையை வெளிப்படுத்தி அக்குற்றச்சாட்டுக்களிலிருந்து மீள வேண்டும் என்றும் அவர்  சுட்டிக்காட்டினார்.

நமது நாட்டின் இறைமைக்கு குந்தகம் விளைவிக்கும் எமது நாட்டுக்கு பாதகமாக அமையும் எந்த ஒரு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடப்போவதில்லை என மிகத்தெ ளிவாக கூறவிரும்புகிறேன்.

ஆகையால் எவரும் எந்தவொரு பீதியும் கொள்ளத்தேவையில்லை. ஒருபோதும் நாம் இந்த நாட்டை எவருக்கும் தாரைவார்த்துக் கொடுக்கமாட்டோம் என்பதையும் அதனை செய்ய நாம் ஆட்சிக்கு வரவில்லை என்பதனையும் இந்த நாட்டின் நன்மைக்காக பாரிய வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காகவும் நாட்டை முன்னேற்றுவதற்காகவுமே நாம் ஆட்சிக்கு வந்தோம் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார்.

சர்வதேசம்ஜனாதிபதிதேர்தல்மைத்திரிபாலவிசாரணைகள்ஸ்ரீலங்கா
Comments (0)
Add Comment