குளிர்கால கூட்டத்தொடரில் அரசியலமைப்புச் சட்டம் குறித்து விவாதம்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.

 முதல் நாள் அமர்வில் மக்களவையில் புதிய உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 2008ம் ஆண்டு மும்பையில் தாக்குதல் நடைபெற்றதன் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுவதையடுத்து. அந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

 தொடர்ந்து, இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டதன் நினைவாகவும், சட்டமேதை அம்பேத்கரை கவுரவிக்கும் வகையிலும் சிறப்பு விவாதம் நடைபெற்று வருகிறது. மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், அரசியலமைப்பு சட்டம் குறித்தும், அம்பேத்கரை நினைவு கூர்ந்தும் பேசினார்.

 மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விவாதத்தை தொடங்கி வைத்து பேசி வருகிறார். இதேபோல், மற்ற கட்சிகளின் உறுப்பினர்களும் அரசியலமைப்பு சட்டம் குறித்து தங்கள் கருத்துகளை எடுத்துவைக்க உள்ளனர்.

 பிரதமர் மோடி நாளை அரசமைப்புச் சட்டம் குறித்து பேசுகிறார். மாநிலங்களவையில், மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மும்பை தாக்குதல் நினைவு நாளையொட்டி, இரண்டு நிமிடம் உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். இதன்பிறகு அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

அம்பேத்கர்அரசியலமைப்புச் சட்டம்குளிர்கால கூட்டத்தொடர்நாடாளுமன்றம்பிரதமர் மோடி
Comments (0)
Add Comment