குவைத்தில் இருந்து இலங்கை சென்ற விமானத்தில் பயணித்த பயணியொருவர் விமானத்தினுள் உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரியொருவர் தெரிவிள்ளார்.
59 வயதுடைய இலங்கை பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
திடீர் மாரடைப்பு காரணமாக இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக விமான நிலைய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 6.10 மணியளவில் குவைத்தில் இருந்து இலங்கை வந்த விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் -230 என்ற விமானத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணையை விமான நிலையப் பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக மேலும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.