கூகுல் நிறுவனம் தமிழ்மொழிக்கு வழங்கியுள்ள அங்கீகாரம்!

கூகுல் நிறுவனத்தின் விளம்பர தொழில்நுட்பமான எட்சென்ஸ் பயன்பாட்டுக்கு தமிழ் மொழியும் உள்வாங்கப்பட்டுள்ளது. கூகுல் நிறுவனம் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி தற்போது தமிழ் மொழியில் விளம்பரங்களை அமைத்து, தமிழ் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளை இலக்கு வைத்து, அவற்றை பிரபல்யப்படுத்தவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எட்சென்ஸில் மொத்தமாக 41 மொழிகள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், இலங்கையில் பேசப்படும் மொழிகளில் தமிழ் மாத்திரமே அங்கீகாரம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எட்சென்ஸ்கூகுல்தமிழ்தொழில்நுட்பம்மொழி
Comments (0)
Add Comment