தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்திலும், கூட்டு அரசாங்கத்தின் காலம் தாழ்த்தும் போக்கும் மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ,தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அரசாங்கத்திற்கு கூடுதலான அழுத்தங்களை பிரயோகப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிவுகள்
மேலும் கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் பின்னடைவை ஏற்படுத்தியமையை ஏற்றுக் கொண்டு அதற்கான திருத்தங்களையும், தீர்வுகளையும் மீட்டுப்பார்ப்பது நமக்கு பொருத்தமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, குறித்த விடயம் தொடர்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தை கூட்டி ஆராய வேண்டும் எனவும் தனது கடித்ததில் அவர் வலியுறுத்தி உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.