கூட்டு எதிரணி ஆதரவாளர்கள் மீது கல்வீச்சு தாக்குதல்…

சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு  எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலமையிலான கூட்டு எதிரணி இன்று  பாரிய பேரணிஒன்றை முன்னெடுத்துள்ளது.

இந்தப் பேரணியில் கலந்து கொள்வதற்காக மக்களை ஏற்றி செல்வதற்கு தயாரான பஸ் ஒன்றின் மீது பதுளை பகுதியில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இலக்கத் தகடு அற்ற கனரக வாகனம் ஒன்றில் சென்றவர்களே இந்த தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த  பஸ்ஸில் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின் ஆதரவாளர்கள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதரவாளர்கள்கல்வீச்சுகூட்டு எதிரணிபதுளை
Comments (0)
Add Comment