கெஜ்ரிவால் அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகள் திடீர் சோதனை

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அலுவலகம் அமைந்துள்ள தலைமைச் செயலகத்தின் 3வதுதளத்தில், சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை (2015/12/15) காலை திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்த சோதனை குறித்து டிவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் கெஜ்ரிவால், அரசியல் ரீதியாக தன்னை எதிர்கொள்ள முடியாத காரணத்தால், சி.பி.ஐ. அமைப்பை பயன்படுத்தி பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், பிரதமர்மோடி ஒரு கோழை என்றும் அவர் மனநோயாளி என்றும் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். இதனிடையே, டெல்லியில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக சி.பி.ஐ. வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் கெஜ்ரிவாலின் முதன்மை செயலாளர் ராஜேந்திர குமாரின் மீது எழுந்த புகாரின் பேரில் தான், அவருடைய அலுவலகம் மற்றும் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், கெஜ்ரிவால் அலுவலகத்தில் சோதனை நடத்தப்படவில்லை என்றும் சி.பி.ஐ. விளக்கியுள்ளது.

ஆனால் இதனை மறுத்துள்ள முதலமைச்சர் கெஜ்ரிவால்,  தனது அலுவலகத்திலும், சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும், மோடிக்கு தேவையான ஏதோ ஒரு கோப்பு தனது அலுவலகத்தில் இருப்பதாக கருதுவதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசியல்அறிக்கைஅலுவலகம்கண்டனம்குற்றம்கெஜ்ரிவால்சிவிஐசோதனைநரேந்திரமோடி
Comments (0)
Add Comment