கென்யாவில் 112 பேர் பலி

கென்யாவில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து அடர் மழை பெய்துவருகின்றது.

இதன் காரணமாக இதுவரையில் அங்கு  112 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது.

வெள்ளம்

மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியே இவர்கள் மரணமடைந்துள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கென்யாவில் ஏற்பட்டுள்ள  வெள்ளம் காரணமாக இதுவரை  48 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் மேலும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

112 பேர்அடர் மழைகென்யாசர்வதேச செஞ்சிலுவை சங்கம்