கேக் விஷமாகி மாணவி உயிரிழப்பு!

அநு­ரா­த­புரம் கஹட்­ட­கஸ்திகிலிய பிர­தே­சத்தில் சித்­திரை புது வருட பிறப்பின் போது உற­வி­னர்­க­ளுடன் சேர்ந்து உட்­கொண்ட கேக் விஷ­மா­னதால் பாட­சாலை மாண­வி­யொ­ருவர் பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­துள்ளார்.
அநு­ரா­த­புரம் மத்­திய மகா வித்­தி­யா­ல­யத்தில் கல்வி பயின்று வந்த 16 வய­தான ஹன்­ஷனி என்ற மாண­வியே கேக் விஷ­மா­னதில் இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்ளார். இதன்­போது அநு­ரா­த­புரம் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்பட்­டி­ருந்த நிலையில் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,
அநு­ரா­த­புரம் , கஹட்­ட­கஸ்திகிலிய பிர­தே­சத்தில் தமிழ் சிங்­கள சித்­திரை புத்­தாண்டில் வீட்­டுக்கு வந்த உற­வி­னர்­க­ளுடன் உட்­கொண்ட கேக் விஷ­மா­னதால் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட 16 வய­தான ஹன்­ஷனி என்ற பாட­சாலை மாணவி சிகிச்சை பல­னின்றி பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­துள்ளார்.
அநு­ரா­த­புரம் மத்­திய மகா வித்­தி­யா­ல­யத்தில் கல்வி பயின்று வந்த குறித்த மாணவி இம்­முறை கல்விப் பொது தரா­தர சாதா­ரண தரப் பரீட்­சைக்கு தோற்­று­வ­தற்கு இருந்­தவர்.
இந்த சம்­பவம் கடந்த 14 ஆம் திகதி இ­டம்­பெற்­றுள்­ளது. குறித்த மாணவி சுக­யீனம் முற்­றதை அடுத்து உற­வி­னர்­க­ளினால் சீபி குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் மாற்றப் பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமையன்று உயிரிழந்துள்ளார்.

அனுராதபுரம்கேக்சிகிச்சைபலிபுத்தாண்டுமருத்துவமனைமாணவிவிஷம்
Comments (0)
Add Comment