கேப்பாபுலவில் காணி தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கேப்பாபுலவில் காணிவிடுவிப்பிற்காக போராடிக்கொண்டிருக்கும் மற்றும் படையினர் வசம் உள்ள காணி உரிமையாளர்களின் விருப்பம் அறியும் கூட்டம் ஒன்று முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில்  நேற்றைய தினம்  நடைபெற்றுள்ளது.
கேப்பாபுலவில் படையினர் வசம் உள்ள காணி உரிமையாளர்கள் சிலர் மீள்குடியேற்ற அமைச்சிற்கு தங்கள் காணியினை படையினருக்கு வழங்கி நட்டஈடு பெற்றுக்கொள்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்கள்.
இன்னிலையில் குறித்த காணி உரிமையாளர்களிடம் எழுத்துமூலம் அவர்கள் விருப்பத்தினை பெற்றுக்கொள்ளும் கூட்டம் ஒன்று கரைதுறைப்பற்று பிரதேச செயலக மண்டபத்தில் உதவி பிரதேச செயலாளர் இ.பிரதாபன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதில் கரைதுறைப்பற்று பிரதேச காணிப்பகுதி அதிகாரி சோ.சேந்தன் அவர்களும் இருந்துள்ளார்.
கேப்பாபுலவில் 55 பேருக்கு சொந்தமான 59.95 ஏக்கர் காணிகளுக்கு காணி உரிமையாளர்கள் தங்கள் விருப்பத்தினை எழுத்துமூலம் தெரிவிக்குமாறு  அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் . இன்று கலந்துகொண்டவர்களில்  பெருமளவானவர்கள் தங்களுக்கு காணிதான் வேண்டும் என்பதை வலியுறுத்தினாலும் 05 காணி உரிமையாளர்கள் தங்களுக்கு காணிக்குரிய நட்டஈடு வழங்குமாறும் விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.
இந்த கூட்டத்திற்கு வருகைதராதவர்கள் கிராம சேவகர் ஊடாக தங்கள் விருப்பத்தினை விண்ணப்பப்படிவத்தில் நிரப்பி வழங்குமாறும் உதவி பிரதேச செயலாளர் பணித்துள்ளார்.
கிராமசேவகர்கேப்பபிலவுபிரதேசசெயலாளர்மக்கள் சந்திப்பு
Comments (0)
Add Comment