கேப்பாபுலவு மக்கள் காணிவிடுவிப்பு போராட்டத்தின் 610 ஆவது நாளில் பல்கலைக்கழக மாணவர்களுகம் இணைந்து கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை நடத்தி உள்ளார்கள்.
கேப்பாபுலவு மக்கள் தங்கள் நிலங்களை விடுவிக்ககோரி தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந் நிலையில் நேற்றையதினம் யாழ்பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து முல்லைத்தீவில் கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை நடத்தியுள்ளனர்.
அதோடு குறித்த விடயம் தொடர்பில் மாவட்ட செயலகத்தில் மனு ஒன்றும் கையளித்துள்ளார்கள்.
இதன்போது யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் கிருஸ்ணமேனன் மற்றும் கேப்பாபுலவு மக்கள் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன்,பிரதேச சபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு நகரில் இருந்து பேரணியாக சென்ற மக்கள் மாவட்ட செயலகத்திற்குள் நுளைய முற்பட்ட போது பொலீஸார் தடுத்துள்ளார்கள் இருவரை அழைத்து அவர்கள் கோரிக்கை அடடிங்கிய மனுவினை உதவி அரசாங்க அதிர் ஆ.லதுமீராவிடம் கையளித்துள்ளார்கள்