நிலத்தின் இனிய பாடல்களுடன்
ஆக்கிரமிப்புக்கு எதிரான சினத்துடன்
உக்கிரமான வார்த்தைகளுடன்
என் குழந்தைகள் நிற்பது
உன் பீரங்கிகளுக்கு முன்னால்
உன் துப்பாக்கிகளுக்கு முன்னால்
இராணுவமுகாங்களுக்கு முன்னால்
என் தேசத்தை
வாயில் கவ்வியபடி வீங்கிப் போயிருக்கும்
மிருகத்தின் முன்னால்
நிலங்களை மென்று பொழுது கழிக்கும்
பீடத்தின் முன்னால்
முறித்தெறியும் புன்னகையுடன்.
நாம் செல்வோம்
தெய்வதிற்கு நிகரான
குழந்தைகளின் பின்னே.
¤
-தீபச்செல்வன்
(First Draft)
http://deebam.blogspot.com/2017/03/2.html