இன்று காலை 9.00 மணிக்கு கேப்பாப்புலவ மக்கள் தமது காணிகளை விடக்கோரி இராணுவ முகாம் முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இராணுவத்தினர் முகாமிற்கு முன்பான முற்கம்பி வேலிபோட்டு தமது வாசற்பகுதியை பாதுகாத்துள்ளனர்.
அதோடு முல்லைத்தீவுப்பகுதி பொலீஷார் நூற்றுக்குமேற்பட்ட அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பொலிஸார் மக்களின் போராட்டத்தை உளரீதியாக பயமுறுத்தும் நோக்கோடு கேப்பாப்புலவு நிலமீட்பு போராட்டத்திற்கு இடையூறுகள் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.