கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர்கள் சூர்யா, கார்த்தி நிதியுதவி..

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர்கள் சூர்யா, கார்த்தி ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.

கேரளாவில் கனமழையால் இடுக்கி, கோழிக்கோடு உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளத்தில் பாதிக்கபப்ட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

அதோடு அங்கு ஆங்காங்கே நிலச்சரிவும் கடும் வெள்ளப்பெருக்கினால்  சாலைகளில் அரிப்பும்  ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்கு பெய்யும் கனமழை காரணமாக  கொச்சி விமான நிலையம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தற்போது வரை கனமழை மற்றும் மண்சரிவில் சிக்கி இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,  பலர் காணாமல் போனதாகவும்   தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அங்கு  கனமழை, மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவியும், வீடுகள், விளை நிலங்களை இழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவியும்   வழங்க உள்ளதாக  கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் கட்டமைப்பது ஒரு கடினமான பணியாக இருக்கும் என்றும்  நிவாரண பணிகளுக்கு அனைவரும் பங்களிக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது  கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர்கள் சூர்யா, கார்த்தி ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.

இதேவேளை ஏற்கனவே புதுச்சேரி அரசு சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி  கேரளாவுக்கு வழங்கப்படும் என  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழக அரசு கேரள மாநிலத்துக்கு ரூ.5 கோடி நிதியுதவி வழங்க உள்ளதாக  என்று  முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கனமழைகார்த்திகேரளாசூரியாநடிகர்கள்நிதி உதவி
Comments (0)
Add Comment