கைகள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

ஹோமாகம, மஹகட்டுவன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து வாய் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவரின்  சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஹோமாகம பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார் எனத் தெரியவருகிறது. கொலையாளி யார் என்பது குறித்து இதுவரை அறியப்படவில்லை என்பதுடன் ஹோமாகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொலையாளிசடலம்பிரதேசம்பெண்போலீஸ்விசாரணைவீடுஹோமாகம
Comments (0)
Add Comment