கைகுலுக்கும் வழக்கம் பல நூற்றாண்டுகளைக் கடந்து தொடர்ந்து வருகிறது. பொதுவாக, கைகுலுக் கல் அமைதியை தெரிவிக்கும் விதமாகவும், ஒருவரது திறந்த உள்ளங்கை அவரது நேர்மை மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை வெளிப்படுத்தும் அடையாளமாகவும் ஆரம்பமாகியுள்ளது. உள்ளங்கைகளைக் காட்டும் இந்த வழக்கம் மாறி தற்போது வழக்கத்தில் உள்ள கைகுலுக்கும் முறைக்கு முன்னேறியுள்ளது.
இது வாழ்த்துச் சொல்வது அல்லது புறப்படுவது, ஆறுதல் தருவது, மரியாதை, நட்பு, அமைதி, நல்ல விளையாட்டு வீரராக அடையாளப்படுத்துதல் அல்லது ஒப்பந்தம் ஆகியவற்றின் சர்வதேச அடையாளமாக மாறி விட்டது. தனிநபரின் முக்கியத்துவத்தைத் தாண்டி கைகுலுக்குதல் என்பது வணிக மற்றும் அரசியல் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது. சமீப காலங்களில் கைகளின் முக்கியத்துவம் கருத்தில் கொள்ளப்பட்டு உள்ளது. அவை நோய்த் தொற்று ஏற்படுத்தும் காரணியாக இருப்பதால், மருத்துவமனை மற்றும் பிற சுகாதார மையங்களில் கைகளை சுத்தமாக வைத்திருப்பதற்கு பரிந்துரைப்பதும், அதற்கான கொள்கைகள் வகுப்பதும் அவசியமாகிறது.
சுகாதார நலப் பணியாளர்கள் நோயாளிகளின் வழியே தங்களது கைகளில் நோய் பாதிப்பு ஏற்படுத்திக்கொள்கின்றனர். நோய் பரவலை குறைப்பதற்கான முயற்சிகள் ஒருபுறம் எடுக்கப்பட்டாலும், வழக்கமான நோயாளிகள் மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலை தொடர்புகளால் சுகாதார நலப் பணியாளர்களின் கைகள் நோய்ப் பாதிப்புக்கு ஆளாகின்றன என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.