கைதான சீமானை மதுரை கொண்டு சென்றனர் காவற்துறை

2023 ஆம் ஆண்டினை இலக்காக கொண்டு தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தொகதிகளிலும் 2016 ஆண்டு நாம்தமிழர் கட்சி போட்டியிடவுள்ளதாக சீமான் அறிவித்துள்ள நிலையில் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளையும் எதிர்ப்போம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 17ம் திகதி காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சீமான் பங்கேற்றார்.

அங்கிருந்து இரவு மதுரை திரும்பினார். மேலூர் அருகே சிட்டம்பட்டி அருகே சீமானில் கார் வந்த போது சுங்கச் சாவடியில் கட்டணம் செலுத்துமாறு கேட்டுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது.மேலூர் டிஎஸ்.பி மணிரத்னம் தலைமையில் சென்னை வந்த காவல்துறை ஆலப்பாக்கத்தில் உள்ள சீமான் வீட்டிற்குச் சென்றனர்.

அங்கு சீமான் வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும் போராட்டத்திற்கு ஆயத்தமாக கொண்டிருந்தார்.அவரை கைது செய்த காவல்துறை வேனில் ஏற்ற முயன்ற போது அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.எனினும் காவல்துறை சீமானை மதுரை கொண்டு சென்றனர்.மதுரை நீதிமன்றத்தில் இன்று சீமான் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளார் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஒருங்கிணைப்பாளர்கைதுசீமான்சென்னையில்செய்யப்பட்டுள்ளார்.தமிழர்நாம்நேற்று
Comments (0)
Add Comment