கைத்துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது!

திவுலப்பிட்டி பிரதேசத்தில் ஆயுதமொன்றுடன் 73 வயதான நபரொருவரை பொலிஸாரால் கைது செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர் துனகஹா பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேல் மாகாண வடக்குப் பகுதியைச் சேர்ந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய தேடுதல் வேட்டையின் போது குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மினுவன்கொட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதாகவும் அவரை எதிர்வரும் 8ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபரிடமிருந்து 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது.

இலங்கைகைதுகைத்துப்பாக்கிபுலனாய்வு
Comments (0)
Add Comment