மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி நாட்டில் புழக்கத்தில் இருந்த உயர்மதிப்புடைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக அறிவித்தது, புதிய 2000, 500 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. மத்திய அரசு உள்நாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கருப்பு பணத்திற்கு எதிரான நடவடிக்கை என்றது. பொதுமக்கள் தங்களிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளை டெபாசிட் செய்தனர். மத்திய அரசின் இந்நடவடிக்கையை காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.
பொதுமக்கள் 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்துவதற்கான 50 நாள் அவகாசம், கடந்த 30-ம் தேதியுடன் முடிவடைந்தது.
இந்நிலையில் பிரதமர் மோடி உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட பின்னர் எவ்வளவு கருப்புப்பணம் பிடிபட்டது என்பதை தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையானது வலுத்து உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி செய்தியாளர்களிடம் பேசுகையில், உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் ஒழிப்பிற்கு பிறகு எவ்வளவு கருப்புப்பணம், கள்ள நோட்டுகள் மற்றும் பயங்கரவாதத்துக்கு செல்லும் நிதி பிடிபட்டன என்பதை என்பதை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டும். ரூபாய் நோட்டுகள் வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு மக்களால் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட ரூ.14.86 லட்சம் கோடி பணம் இப்போது யாருடைய காவலில் உள்ளது என்பதையும், அதை எவ்வாறு அழிக்கப் போகிறார்கள் என்பதையும் அறிய விரும்புகிறேன்.
பழைய நோட்டுகளை சுப்ரீம் கோர்ட்டு அல்லது பாராளுமன்ற கூட்டுக் குழு ஒன்றின் மேற்பார்வையில் அழிக்க அரசு தயாராக உள்ளதா? நாட்டில் உள்ள 120 கோடி மக்கள் மீது ரூபாய் நோட்டு வாபஸ் என்ற துல்லியத் தாக்குதலை பிரதமர் மோடி நடத்தினார். அதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் முக்கியமான கேள்விகளுக்கு ரூபாய் நோட்டு வாபசுக்கான அவகாசம் முடிந்த பின்னரும் மோடி பதிலளிக்கவில்லை. இதுவரை எவ்வளவு கருப்புப் பணம் கைப்பற்றப்பட்டது? என்பது உள்பட இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்தையும் ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் தெரிவிக்கவில்லை.
இதுவரையில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் எந்தவொரு கேள்விக்கும் பிரதமர் பதிலளிக்காதது ஏன்? இதுதான் சர்வாதிகாரிகளின் செயல்பாடாகும். அவர்கள், தங்கள் எதிரிகளை துரோகிகள் என்பது வர்ணிப்பது வழக்கமானது. புத்தாண்டை முன்னிட்டு பி