விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்டுள்ள புறங்கையில் அணியக்கூடிய மிக வும் மெல்லிய இலத்திரனியல் தோல் மூலமே இது சாத்தியமாகியுள்ளது.
அகற்றக்கூடிய பச்சை குத்தும் அடையாளம் போன்று கையில் பொருத்தப்படும் இந்த இலத்திரனியல் தோல் சிவப்பு, பச்சை மற்றும் நீல நிற ஒளியைக் காவும் இரு மின்முனைகளைக் கொண்டுள்ளது.
இதன் மூலம் திரைப்படங்களிலான வர்ணக் காட்சிகளை எல்.ஈ.டி. ஒளியின் மூலம் காட்சிப்படுத்துவது சாத்தியமாகிறது.
ஜப்பானிய டோக்கியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியியல் பேராசிரியர் தகவோ சொமியா தலைமையிலான விஞ்ஞானிகளால் இந்த இலத்திரனியல் தோல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த அதிதொழில்நுட்ப தோலானது அதை அணிந்திருப்பவரின் நாடித் துடிப்பு மற்றும் ஒட்சிசன் மட்ட அளவு என்பவற்றையும் கணிப்பிட்டு காட்சிப்ப டுத்தும் வல்லமையைக் கொண்டுள்ளது.