கொத்து ரொட்டியில் அரணை- மூடப்பட்ட உணவகம்…

காத்ததான்குடியில் உள்ள இரவு உணவகத்தில் வாங்கப்பட்ட கொத்து ரொட்டி பார்சலில் இருந்து இறந்த அரணை ஒன்று இருந்துள்ளது.

இதனை அடுத்து  உணவுப் பொதியை வாங்கிய நபர் சுகாதார அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய  குறித்த உணவகத்தில்  அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டபோது ,மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

தொடர்ந்து  குறித்த உணவகத்தை  மறு அறிவித்தல் வரை மூடியுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி யு.எல். நஷர்டீன் தெரிவித்துள்ளார்.

குறித்த உணவக உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

இதே வேளை குறித்த பிரதேசத்தில் நடாத்தப்பட்ட சோதனைகளின் போது மேலும்   10 உணவகங்களிலிருந்து மனித பாவனைக்கு உதவாத உணவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

உணவகம்உண்வகம்காத்தான்குடிமட்டக்களப்பு
Comments (0)
Add Comment