கொள்ளுபிட்டியில் தற்கொலை குண்டுதாரிக்காக பிரார்த்தனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி மௌலவி உட்பட ஐவர் நேற்று மாலை அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளுபிட்டியில் உள்ள மொஹம்மட் இப்ராஹீம் அன்ஷாப் அஹமட்டின் மனைவின் வீட்டில் வைத்து அவர்களைக் கைதுசெய்ததாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் கூறியுள்ளனர்.
கொழும்பு சினமன் கிரான்ட் விடுதியில், தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய, வெல்லம்பிட்டி செப்புத் தொழிற்சாலை உரிமையாளர் மொஹம்மட் இப்ராஹீம் இன்ஷாப் அஹமட்டுக்காக பிரார்த்தனை நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த மெளலவி ஒருவரும் மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த மேலும் நால்வருமே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து முச்சக்கர வண்டியொன்றையும் வீட்டில் இருந்த ட்ரோனர் கமெரா ஒன்றும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.