கொழும்பில் திட்டமிட்டு புறக்கணிக்கப்படும் தமிழ்மொழி – சீன மொழி திணிப்பு..

இலங்கையிலுள்ள பெயர் பலகைகள் சிங்களம், தமிழ், ஆங்கில மொழிகளில் காணப்படும்.

எனினும் கொழும்பு நகரில் முன்னெடுக்கப்படுகின்ற குப்பை முகாமைத்துவ திட்டத்தின் பெயர் பலகையில் தமிழ் மொழியில் எழுதப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த பெயர் பலகை முதலில் சிங்கள மொழியிலும் இரண்டாவதாக சீன மொழியிலும் மூன்றாவதாக ஆங்கில மொழியிலும் எழுதப்பட்டுள்ளது.

தமிழ் மொழியில் எழுதப்பட வேண்டிய இடத்தில் சீன மொழி இணைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  குறித்த திட்டம் மேல் மாகாண மற்றும் மாநாகர அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில் திட்டமிட்டு தமிழ் மொழி நிராகரிக்கப்பட்டுள்ளமை  தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அறிவித்தல் பலகைசீன மொழிதமிழ் மொழிதிணிப்புநிராகரிப்பு
Comments (0)
Add Comment