அடுத்த வாரமளவில் கொழும்பில் ஒரு இலட்சம் பேரைக் குவித்து, பாரிய பேரணியை நடத்த ஐ. தே. கட்சி தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை பொருட்படுத்தாமல், இந்தப் பேரணியை நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகிவருவதாக, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் இருந்து ஒரு இலட்சம் பேரைக் கொண்டு வந்து, கொழும்பில் குவித்து தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பேரணி நடத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தங்களைக் கொடுப்பதற்கே, ஐதேக இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
குறித்த பேரணியானது ஜனாதிபதியின் வதிவிடம், செயலகம் என்பனவற்றை முற்றுகையிட்டு நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 12ஆம் நாள் நாடாளுமன்றம் மீண்டும் கூடும் போது, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராகத் தெரிவு செய்யும், தீர்மானத்தை முன்வைத்து வாக்கெடுப்பு நடத்துவதற்கும் ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது