கொழும்பு குப்பைகளை அப்புறப்படுத்தும் படையினர்!

கொழும்பு நகரில் கடந்த சில தினங்களாக குவிந்துள்ள குப்பைகளை நான்கு தினங்களுக்குள் அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொட்டாஞ்சேனை கணபதி மகளிர் வித்தியாலத்தில் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் நேற்று (15) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

அரச நிறுவனங்களில் நடக்கும் பிரச்சினைகளால், ஏற்படும் பாதிப்புகளால் மக்கள் கஷ்டத்திற்கு உள்ளாக இடமளிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு நகரில் குவிந்துள்ள குப்பை பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

முப்படையினரை பயன்படுத்தி இந்த குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கொட்டாஞ்சேனைகொழும்புஜனாதிபதிரவி கருணாநாயக்க