கொழும்பு நட்சத்திர விடுதிளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் வெளிநாட்டவர்கள் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

கொழும்பு நட்சத்திர விடுதிளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் வெளிநாட்டவர்கள் பலர் உயிரிழந்திருப்பதுடன் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அங்கு தொடர்ந்தும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதால் இழப்புக்கள் தொடர்பில் சரியான தகவல்களை உடனடியாக கூற முடியாதுள்ளதாக பொலிஸ் தலைமையகம்அறிவித்துள்ளது.

சீனாவிற்கு சொந்தமான நட்சத்திர சுற்றுலா விடுதியான சங்கிரி லா ஹோட்டலின் உணவகத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பல வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன் எராளமானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சினமன் கிறாண்ட் மற்றும் சிறிலங்கா ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலுள்ள கிங்ஸ்பெரி நட்சத்திர ஹோட்டலிலும் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களிலும் பல வெளிநாட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சங்கிரி-லாவெளிநாட்டவர்கள்ஹோட்டல்
Comments (0)
Add Comment