இதன் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் காய்கறி உற்பத்தி இந்த சீசனில் அதிகமாக உள்ளது.
விளைச்சல் அதிகரிப்பு காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் காய்கறிகள் வருகிறது. இதன் காரமணாக காய்கறி விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டு கால காய்கறி விற்பனையை ஆய்வு செய்ததில், இந்த சீசனில் காய்கறி விலை மிக, மிக கடுமையாக குறைந்திருப்பது இதுவே முதல் தடவை என்று தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக கோயம்பேடு மார்க்கெட் கமிட்டி செய்தித் தொடர்பாளர் சவுந்தரராஜன் கூறியதாவது:–
சென்னையில் சமீபத்தில் பெய்த மழையால் ஏற்பட்ட பாதிப்பு மக்களை வெகுவாக பாதித்துள்ளது. பலர் இன்னும் அந்த பாதிப்பில் இருந்து முழுமையாக மீள வில்லை. அவர்களுக்கு உதவும் வகையில் காய்கறி விலைகளை குறைத்துள்ளோம்.
தக்காளி கிலோ ரூ.10க்கு விற்கப்படுகிறது. வெங்காயம் கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்கப்படுகிறது.
பீன்ஸ், கத்திரிக்காய் போன்றவை முந்தைய சீசனில் கிலோ ரூ.40க்கு விற்கப்பட்டது. தற்போது ரூ.20–க்கு விற்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.