கௌரவக் கொலைகள் தடுப்புச் சட்டத்தை இயற்றக்கோரி ஆர்ப்பாட்டம்: தொல்.திருமாவளவன் அறிவிப்பு

கௌரவக் கொலைகள் தடுப்புச் சட்டத்தை இயற்றக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் ஜூலை 13-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் அண்மைக் காலமாக  கௌரவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன. கௌரவக் கொலைகளைத் தடுப்பதற்கு மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநில அரசுகள் மத்திய அரசுக்கு பரிந்துரை  செய்துள்ளன. தமிழக அரசு மட்டும் இது குறித்து எந்தப்   பரிந்துரையையும் அளிக்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.  எனவே கௌரவக் கொலைகள் தடுப்புச் சட்டத்தை உடனடியாக இயற்றக் கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி ஜூலை 13-ஆம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.

அறிவிப்புஆர்ப்பாட்டம்கௌரவக் கொலைகள்தடுப்புச் சட்டம்தமிழக அரசுதொல் திருமாவளவன்பரிந்துரைவிடுதலைச் சிறுத்தைகள்
Comments (0)
Add Comment