க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் காலதாமதம்…

 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் காலதாமதம்ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில்   நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறையினால் இந்த காலதாமதம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அகில இலங்கை ஆசிரியர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

குறைந்தளவான கொடுப்பனவு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுவதில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஆசிரியர் பற்றாக்குறை குறித்து கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உயர்தரம்கா.பொ.ததிருத்துதல்பரீட்சைவிடைத்தாள்
Comments (0)
Add Comment