சங்குப்பிட்டிப் பாலத்தில் தடம்புரண்ட பேருந்து…

யாழ்ப்பாணம்- முழங்காவில் இடையே  சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்று  இன்று மதியம் சங்குபிட்டி பாலத்திற்கு அருகில்  விபத்திற்குள்ளாகியுள்ளது.

மாடு ஒன்று குறுக்கே சென்றதாலேயே இந்த  விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

விபத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில்  அவர்கள் அம்புலன்ஸ்  மூலமாக யாழ்ப்பாணம் மற்றும் பூநகரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும்  கூறப்பட்டுள்ளது.

இதேவேளை பேருந்து தடம் புரண்டு பாரிய விபத்து இடம்பெற்றிருந்த போதிலும் பேருந்தில் பயணித்தவர்கள் எவருக்கும் பெரியளவில் காயங்கள் ஏற்படவிலை என தெரிவிகபப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சங்குபிட்டிபாலம்பேருந்துமாடுவிபத்து
Comments (0)
Add Comment