சசிதரன் யார் என்றே எனக்குத் தெரியாது: கனிமொழி விளக்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி எழிலன் என்கிற சசிதரனை இலங்கை ராணுவத்திடம் சரணடையுமாறு தான் கூறவில்லை என மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.

முன்னதாக 2009ம் ஆண்டு இலங்கைப் போரின் போது இலங்கை ராணுவத்திடம் எழிலன் உட்பட பல விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்கள் சரணடைந்தனர்.

எழிலன் உட்பட சரணடைந்த பல தலைவர்களின் நிலை என்னவானது என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்காத நிலையில், எழிலனின் மனைவி அனந்தி சசிதரன் நீதிமன்றத்தில் அளித்த சாட்சியத்தின் போது, திமுக எம்பி. கனிமொழியிடம் பேசிய பிறகே சசிதரன் என்கிற எழிலன் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தார் என்று தெரிவித்திருந்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த கனிமொழி, சசிதரன் யார் என்றே எனக்குத் தெரியாது. அவருடன் நான் செயற்கைக் கோள் தொலைபேசியில் பேசி சரணடையுமாறு கூறியிருப்பது முற்றிலும் தவறான விடயம் என்று கூறியுள்ளார்.

அனந்தி சசிதரன்இலங்கை ராணுவம்கனிமொழிசசிதரன்சரண்மூத்த தளபதி எழிலன்விடுதலைப் புலி
Comments (0)
Add Comment