சட்டமன்ற தேர்தலுக்குள் ஊழல்வாதிகளை துரத்த வேண்டும் – தொடர் முழக்கப் போராட்டம்

ஊழல் ஒழிக்கப்படுவதற்காக பலக் கட்டப் போரட்டங்களை மக்கள் மாநாடு கட்சியும் பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.  

இருப்பினும் தமிழக அரசு இதுவரை  லோக் ஆயுக்தாவையும் சேவை உரிமைச் சட்டத்தையும் நிறைவேற்றவில்லை. ஆனால், தமிழகம் முழுவதும் ஊழல்,இலஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடும் மாநிலமாக மாறியுள்ளது. இந்த நிலை நீடித்தால், ஊழல்வாதிகள் தங்களிடம் உள்ள ஊழல் பணத்தில் பெருமளவு தேர்தல் தில்லுமுல்லுவில் ஈடுபட்டு மீண்டும் ஊழல் ஆட்சியைத்தான் அளிப்பார்கள். இதனை ஒருகாலும் அனுமதிக்க முடியாது. என்கிற காரணத்தால் வருகின்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஊழல்வாதிகள் அடையாளம் காணப்பட்டு அரசியலை விட்டு துரத்தி அடிக்கப்பட வேண்டும்.

அந்த வகையில்,  நடைபெறுகின்ற தமிழ்நாடு சட்டமன்றத் தொடரிலேயே  ஊழல் ஒழிப்பு  சட்டங்களான‌ லோக் ஆயுக்தாவையும் சேவை உரிமைச் சட்டத்தையும் நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி தொடர் முழக்கப் போராட்டம் 3-2-2016   புதன் கிழமை அன்று சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுமெனத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அமைப்புஅரசுஊழல்ஒழிப்புகட்சிதமிழகம்போராட்டம்மக்கள்மாநாடு
Comments (0)
Add Comment