சட்டமன்ற தேர்தல்; அரசியல் கட்சிகள் தீவிர பணிகள்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளை செய்து வருகின்றன.

ஆளும் கட்சியான அ.தி.மு.க. தொகுதி, வார்டு வாரியாக நிர்வாகிகளை நியமித்து, பிரசாரங்களையும் தொடங்கிவிட்டது.  மேலும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் தொண்டர்களிடம் இருந்து கடந்த 20-ந்தேதி முதல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் 5 சிறப்பு கவுண்ட்டர்களை அமைத்து அ.தி.மு.க. விருப்ப மனுவை வாங்கி வருகிறது.  அதுமட்டுமில்லாமல் புதுச்சேரி மற்றும் கேரளா சட்டமன்ற தேர்தலுக்கான விருப்பமனு வழங்குவதற்காகவும் சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த வகையில், கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று விருப்பமனுக்களை பெற்று, பூர்த்தி செய்து கொடுத்து வருகின்றனர்.

நேற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள், மகளிரணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விருப்பமனுவை ஆர்வமுடன் வாங்கி பூர்த்தி செய்து வழங்கினர்.  நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் படுகர் இனமக்கள் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, உதகமண்டலத்தில் (ஊட்டி) போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தனர். இதற்காக அவர்கள் தங்களுடைய பாரம்பரிய உடை அணிந்து வந்து விருப்பமனு பெற்றனர்.  இதேபோல், தி.மு.க. சார்பில் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் தொண்டர்கள் இருந்து கடந்த 24-ந்தேதி முதல் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் விருப்பமனுவை பெற்று, பூர்த்தி செய்து கொடுத்து வருகின்றனர்.

தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து விருப்பமனுவை பெற்று நேற்றும் பூர்த்தி செய்து கொடுத்தனர். இதில் பெரும்பாலானோர் தி.மு.க. தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் தங்கள் தொகுதிகளில் போட்டியிட வேண்டியும், தாங்கள் போட்டியிடுவதற்கும் விருப்பம் தெரிவித்து மனுக்களை அளித்தனர்.  நேற்று பிற்பகல் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டு இருந்த சிறப்பு கவுண்ட்டர்களை பார்வையிட்டு, அங்கு இருந்த நிர்வாகிகளிடம் பேசினார்.

அதிமுகஅரசியல்கட்சிசட்டமன்றம்தமிழகம்தேர்தல்நிர்வாகம்பிரச்சாரம்மாதம்வார்டு
Comments (0)
Add Comment