குழந்தை திருமணம் மற்றும் ஜாதி ஆணவக்கொலையை எதிர்த்து, அனைந்திந்திய ஜனநாய மாதர் சங்கத்தின் தமிழ் மாநில சிறப்பு மாநாடு சிவகாசியில் வியாழக்கிழமை நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு நீதிபதி மேலும் பேசியதாவது:குழந்தை திருமணப் பிரச்சனை உலகம் முழுவதிலும் உள்ளது.நம் நாட்டில் பெண்களை தெய்வமாக மதிக்கிறோம். அதே நேரத்தில் காலால் மிதிகவும் செய்கிறோம். அந்த காலத்தில் மகாத்மாகாந்தி எழுதிய நவஜீவன் பத்திரிக்கையில் குழந்தை திருமணம் குறித்து புள்ளி விபரங்களை தெரிவித்துள்ளார்.அப்போதய ஜனத்தொகை இந்தியாவில் 30கோடி. அப்போதும் குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளது.
1860ல் இந்திய தண்டணை சட்டம் நிறைவேற்றப்பட்டது.ஜோசி கமிட்டி பரிந்துரைக்குப்பின்னர் குழந்தைதிருமணம் தடுப்பு சட்டம் வந்தது.பொருளாதார ரீதியிலும், விரைவில் பிள்ளைக்கு திருமணம் செய்து விட வேண்டும் என்ற நோக்கத்திலும் குழந்தை திருமணங்கள் நடைபெறுகிறது.தற்போது இந்தியாவில் 7 வங்கிகளில் தலைமை பொறுப்பில் பெண்கள் உள்ளார்கள். 40 வங்கிகளில் உயர் பதவியில் பெண்கள் உள்ளார்கள்.மேம்பட்ட சமூகம் ஒருபுறம், பிறப்போக்கான சமூகம் ஒரு புறம்.2010 ஆம் ஆண்டுக்குப்பின்னர் பொருளாதாக வீழ்ச்சிக்கு பின்னர் குழந்தை திருமணங்கள்அதிகரித்து விட்டது.
சமூக ஆர்வலர்கள், அரசு இணைந்து இதனை தடுத்து நிறுத்த வேண்டும்.தமிழகத்தில் 2003 ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டுவரை 47 ஜாதி ஆவணக்கொலைகள் நடைபெற்றுள்ளது.பதிவு செய்யப்படாமல்மேலும் பல இருக்கலாம்.சட்டத்தினாலும், நீதி மன்றத்தினாலும் இதனை தடுத்து நிறுத்த இயதாலது. மக்களின் மனதில் மனமாற்றம் வரவேண்டும். அப்படி வந்தால் தான் தடுத்து நிறுத்த இயலும்.தடுத்து நிறுத்திய பின்னர் அவர்களுக்கு தேவையான பொருளாதார உதவி, சட்ட உதவி செய்ய வேண்டும்.பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். இதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என்றார் நீதிபதி.
மாநாட்டிற்கு அந்த அமைப்பின் மாநிலத்தலைவர் எஸ்.வாலண்டினா தலைமை வகித்தார்.பேராசிரியர் ஆர்.ராஜாமணி வரவேற்றார்.மாநில பொது செயலாளர் பி.சுகந்தி ஆய்வறிக்கை வாசித்தார்.அகில இந்திய துணைத்தலைவர் உ.வாசுகி வாழ்த்துரை வழங்னார்.விருதுநகர் மாவட்ட செயலாளர் எஸ்.லட்சுமி நன்றி கூறினார்.