சட்டவிரோதமான முறையில் டுபாய் நாட்டில் இருந்து நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட சிகரெட் தொகைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய சுங்க பிரிவு அதிகாரிகள் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
இதன்போது அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சிக்கரெட் தொகைகளின் பெறுமதி 1, 530, 000 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 45 வயதுடையவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.