சட்ட மாமேதை அம்பேத்கரின் 58-வது நினைவு தினத்தையொட்டி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
தலைநகர் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் உருவப்படத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மத்திய அமைச்சர்கள் அண்ணல் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினர்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் சட்ட மாமேதையின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மகாராஷ்டிரா தலைநகர் மும்பையிலுள்ள நினைவிடத்தில் மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்தார். மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் கட்சியினரும் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.