சமஷ்டி என்பது பிரிவினை அல்ல!

சமஷ்டி என்­பது பிரி­வினை என்ற மாயை­யி­லி­ருந்து பெரும்­பான்­மை­யினத் தலை­வர்கள் விடு­ப­ட­வேண்­டு­மென தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சி.சிறி­தரன் தெரி­வித்தார்.

நேற்று புதன்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு பேர­வை­யாக பாரா­ளு­மன்றை மாற்­றி­ய­மைக்கும் குறித்த பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

இலங்கைத் தீவின் வர­லாற்றில் திருப்பு முனை­யான ஒரு கால­கட்­டத்­தி­லேயே நாங்கள் அனை­வரும் அடி­யெ­டுத்து வைத்­துள்ளோம். இன­வாதம், மத­வாதம் போன்­ற­வற்றைக் கடந்து, அர­சியல் இலா­பங்­களை துறந்து எங்கள் அனை­வ­ருக்கும் உரித்­தான இலங்கைத் தீவின் எதிர்­கா­லத்தை ஒளி­ம­ய­மா­ன­தாக மாற்­று­வ­தற்­காக நாம் ஒன்­றி­ணைவோம்.

1926 ஆம் ஆண்டு முன்னாள் பிர­த­மரும் சுதந்­திரக் கட்­சியின் ஸ்தாப­க­ரு­மான எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்­டாரநாயக்க சமஷ்டி தீர்வுத் திட்­டத்தை முன்­வைத்தார். எனினும் அவ­ரது கருத்­துக்கள் புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ளன. இத­னை­ய­டுத்தே 1976 இல் வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த வட்­டுக்­கோட்டைத் தீர்­மா­னத்தை நிறை­வேற்ற வேண்­டிய தேவை எழுந்­தது.

அன்று தனி­நாட்டுக் கொள்­கையில் உறு­தி­யாக இருந்த சம்­பந்தன் இன்று சுயாட்சிக் கோரிக்­கை­யையும் கைவிட்டு ஐக்­கிய இலங்­கைக்குள் தீர்­வொன்றை காண்­ப­தற்­காக நல்­லெண்ண சமிக்­ஞை­களை வெளி­காட்டி வரு­கின்றார். எதிரும் புதி­ரு­மாக இருந்த ஐ.தே.க.வும் ஸ்ரீல.சு.கட்­சியும் ஒருங்­கி­ணைந்த அர­சாங்கத்தை உரு­வா­கி­யுள்­ளன.

இத்­த­கைய வாய்ப்பு இனி­வ­ருமா? என்­பது கேள்­விக்­கு­றி­யே­யாகும். ஆகவே இந்தச் சந்­தர்ப்­பத்தை சரி­யாக பயன்­ப­டுத்­துவோம். உரிமை மறுக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உரிமையும் நீதி மறுக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதியையும் வழங்­கு­வ­தற்­காக நாம் அனை­வரும் ஒன்­றி­ணைய வேண்டும். அதுவே நிலை­பே­றா­ன சமா­தா­னத்தை இந்த தீவில் உரு­வாக்­கு­வ­தோடு நல்­லி­ணக்கம் ஏற்­ப­ட­வ­ழி­ய­மைக்கும்.

தமி­ழர்­களின் மரபு வழித் தாய­க­மான இணைந்த வட­கி­ழக்கு, தேசியம், சுய­நிர்ணம், உரிமை மற்றும் இறை­யாண்­மையை உள்­ள­டக்­கிய சமஷ்டி முறை­யி­லான தீர்வுமுறையை புதிய அர­சி­ய­ல­மைப்பு உள்­வாங்­கு­வது அவ­சியம். அதற்­கேற்­ற­வ­கையில் அர­சி­ய­ல­மைப்பு பேரவை செயற்­படும் என்ற நம்­பிக்கை உள்­ளது.

அன்று சிங்­களத் தலை­வர்கள் முன்­வைத்த தீர்வு முறை­க­ளையும் கோட்­பா­டு­க­ளை­யுமே இன்று நாம் கோரி நிற்­கின்றோம். தமி­ழர்கள் சமஷ்டி தீர்வை மற்றும் இணைந்த வட­கி­ழக்கு கோரிக்­கையை முன்­வைப்­ப­தற்கு முன்­னரே எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்­கவும் கண்­டிய சிங்­கள பிரதிநிதிகளும் அதனை முன்வைத்துள்ளார்கள்.

சமஷ்டி அடிப்படையிலான இணைந்த வடகிழக்கில் தமிழர்கள் இறையாண்மை யுடன் கூடிய ஒரு தேசமாக அங்கீகரிக் கப்பட்டு அவர்களுக்கான சுயநிர்ணய உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதற்கு புதிய அரசியலமைப்பு வழிகோல வேண்டும் என்றார்.

அல்லஎன்பதுசமஷ்டிபிரிவினை
Comments (0)
Add Comment