சமஷ்டி முறைமையைச் சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை என்கிறார் எம்.ஏ.சுமந்திரன் ..

சமஷ்டி முறைமையைச் சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தனியார் செய்திப் பிரிவொன்றிற்கு  வழங்கிய பிரத்தியேக பேட்டியொன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையான காலப்பகுதியில்தான் சிங்களப் பிரதேசங்களில் சமஷ்டி குறித்து பேசியபோதெல்லாம் அதற்கு ஆதரவாகவே அவர்களின் கருத்துக்கள் இருந்ததாகவும்  அவர் கூறியுள்ளார்.

அதோடு  சிங்களவர்கள் வேண்டும் என கூறியிருந்த சமஷ்டி அவர்களிற்கு எதிரானதாக இருக்காது என்ற கருத்தினை தான்  பல சந்தர்ப்பங்களில் எடுத்துக் காட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி அரசியலமைப்புப் பேரவையின் கூட்டமொன்றை நடத்துவதென்றும்,

அதில் இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் முழுமையான வரைபை  சமர்ப்பிப்பதென்றும் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசியலமைப்புச் சட்டம்சமஷ்டி முறைமைசிங்கள மக்கள்சுமந்திரன்
Comments (0)
Add Comment