சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் காவலர் குடியிருப்பு

முறையான பராமரிப்பில்லாததால் மப்பேடு காவலர் குடியிருப்பு, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. திருவள்ளூரை அடுத்துள்ளது மப்பேடு ஊராட்சி. இங்குள்ள காவல் நிலையம் அருகே 6 பிளாட்டுகள் கொண்ட காவலர் குடியிருப்பும் கட்டப்பட்டுள்ளது.

இங்கு போலீஸார், குடும்பத்துடன் வசிக்காமல் தனியாக தங்குகின்றனர். பிள்ளைகளின் கல்வித் தேவை, மருத்துவ வசதி உள்பட அனைத்து வசதிகளும் திருவள்ளூரில் உள்ளதாலும், அடிக்கடி பணி மாறுதல் கிடைப்பதாலும் இதுபோன்று தங்கியுள்ளனர். இதனால், போதிய பராமரிப்பின்றி காவலர் குடியிருப்பு சிதிலமடைந்து வருகிறது. மேலும், இரவு நேரங்களில் குடியிருப்பு வளாகத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மது அருந்துவதாலும், சூதாட்டத்தில் ஈடுபடுவதாலும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.

எனவே, காவலர் குடியிருப்பை முறையாக பயன்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊராட்சிகாவலர்குடியிருப்புகூடம்சமூகவிரோதிகள்திருவள்ளூர்பராமரிப்புபாச்சுலர்பிளாட்டுக்கள்போலீசார்மப்பேடு
Comments (0)
Add Comment