சம்பூரில் காணப்படும் விதுர படை முகாம் விரைவில் இடமாற்றம் செய்யப்படும் என சபை முதல்வரும்,அமைச்சருமான லக் ஷ்மன் கிரியெல்ல சபையில் அறிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் காணப்படும் இராணுவ முகாம்களை வேறுஇடத்திற்கு மாற்றுதல் தொடர்பான தனிநபர் பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மரூப் சமர்ப்பித்திருந்தார். நேற்று வெ ள்ளிகிழமை இடம்பெற்ற இப் பிரேரணை மீதான விவாதத்தல் கலந்துகொண்டு் பதிலளிக்கையிலேயே சபை முதல்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
திருகோணமலை மாவட்டத்தின் சம்பூரில் காணப்படும் விதுர முகாம் முழுமையாக இடமாற்றம் செய்யப்படவுள்ளது. அத்துடன் வெகுவிரைவில் வடக்கு, கிழக்கில் உள்ள ஏனைய முகாம்களை இடமாற்றம் செய்வது குறித்து படிப்படியாக கலந்துரையாடி தீர்மானிக்கப்படும் என்றார்.