சம்மந்தன் தோளில் கைபோட்டு பேசிய மைத்திரி

ஜனாதிபதி மாளிகை மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளமை நீங்கள் அறிந்ததே! இதனை ஜனாதிபதியே திறந்து வைத்துள்ளார். இந்நிலையில் அதை பொதுமக்கள் பார்வைக்கு திறக்கும் நிகழ்வில் எதிர்கட்சித் தலைவர் சம்பந்தனும் கலந்துகொண்டிருந்துள்ளார்.

நிகழ்வின் போது சம்பந்தனின் தோளில் கையை போட்டவாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கதைத்துக்கொண்டிருந்துள்ளார். இதன்போது, அங்கு நிர்மாணிக்கப்பட்டிருக்கும் நிலக்கீழ் அறைக்கு செல்லவில்லையா என ஜனாதிபதியிடம் , சம்பந்தன் கேட்டுள்ளார். இதற்கு சிரித்தவாறே சம்பந்தனைப் பார்த்த ஜனாதிபதி, “ உங்களது வேலைகளுக்கு அமையவே அங்கு செல்லவேண்டி வரும்” என தெரிவித்துள்ளார்.

சம்மந்தன்ஜனாதிபதிதிறப்புபார்வைபேச்சுமக்கள்மாளிகைமைத்திரி
Comments (0)
Add Comment