சரத் பொன்சேகாவிடமிருந்து பீல்ட் மார்ஷல் பட்டத்தைப் பறிக்க திட்டம்….

பீல்ட் மார்ஷல்  சரத் பொன்சேகாவிடமிருந்து அவரது  பட்டத்தைப் பறிப்பதற்கான சட்ட நடைமுறைகள் குறித்து ஜனாதிபதி  ஆராய்ந்து வருவதாக  கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதியையும், முன்னாள் பாதுகாப்புச் செயலரையும் கொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பாக நாமல் குமார என்பவர் தகவல் வெளியிட்டிருந்த நிலையில், அது தொடர்பில்  குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை நடத்தி வருகின்றது.

இதில்  சரத் பொன்சேகாவுக்கு தொடர்பிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும்,  அதனை மூடி மறைக்கும் வகையில் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் செயற்பட்டதாகவும்  ஜனாதிபதி குற்றம் சுமத்தியிருந்தமை நினைவில்கொள்ளத்தக்கது.

இதேவேளை  பீல்ட் மார்ஷல் பதவியானது செயற்பாட்டிலுள்ள ஒரு இராணுவ நிலையாகும். அவருக்கான  ஒரு பணியகமும், முழுமையான இராணுவப் பாதுகாப்புமிருக்கின்றது.

அதோடு சுதந்திர நாள் அணிவகுப்பு,வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடனான சந்திப்புகளில் சரத்பொன்சேக இன்னமும் இராணுவ சீருடையிலேயே பங்கேற்கின்றார்.

இது அவர் இன்னமும் இராணுவ சேவையிலிருக்கின்றார் என்பதை இது தெளிவுபடுத்துவதாக  ஜனாதிபதி செயலக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது..

 

சரத்பொன்சேகாஜனாதிபதிதிட்டம்பட்டம்பீல்ட் மார்ஷல்
Comments (0)
Add Comment