அந்த சர்ச்சை முடிவுக்கு வருவதற்குள் அடுத்த சர்ச்சையை ஆரம்பித்திருக்கிறார் தீபக் தாவலிக்கர். ”பாரதீய ஜனதா கட்சி மற்றும் பிரதமர் மோடியின் தேர்தல் வெற்றி குறித்து இன்று கோவா சட்டப்பேரவையில் பேசிய தவாலிக்கர், மோடியின் சீரிய தலைமையில் இந்தியா ஒரு இந்துக்கள் தேசமாக உருவாகும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. என்னுடைய இந்த விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி செயல்படுவார்” என்று சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.