சர்ச்சைக்குரிய ஜி.எஸ்.டி மசோதா மாநிலங்களவையில் ஒரு மனதாக நிறைவேறியது!

நீண்ட நாட்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்த சர்ச்சைக்குரிய சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நிறைவேறியது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜிஎஸ்டி மசோதா இன்று மாநிலங்களவையில் விவாதத்திற்கு வந்தது. விவாதத்தை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தொடங்கிவைத்தார். தொடர்ந்து எதிர் கட்சி உறுப்பினர்கள் ஜிஎஸ்டி மசோதா குறித்த கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஜிஎஸ்டி மசோதாவில் தமிழக அரசு வலியுறுத்திய மாற்றங்களை மேற்கொள்ள மத்திய அரசு மறுத்ததை தொடர்ந்து வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து நடந்த வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 197 வாக்குகள் பதிவாகின. எதிர்ப்பாக ஒரு வாக்கும் பதிவாகவில்லை. 122வது அரசியல் சட்ட மசோதா இன்று மாநிலங்களவையில் விவாதத்துக்கு வந்தபோது, அரசின் நிலைப்பாட்டை விளக்கிப் பேசிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இந்த மசோதா நிறைவேற்றத்தால், நாடாளுமன்றமோ அல்லது மாநிலங்களோ தங்கள் அதிகாரங்களை இழந்துவிடவில்லை என்றார்.

ஜி.எஸ்.டி மூலம் இறையாண்மை என்பது ஒன்று குவிக்கப்பட்ட அனைவராலும் பகிரக்கூடிய ஒன்றாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

அதிமுகஅருண் ஜேட்லிஜி.எஸ்.டி மசோதாமத்திய அரசுமாநிலங்களவை
Comments (0)
Add Comment