சர்வதேசத்தை நம்பியே வீதியில் உள்ளோம் –காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்..

சர்வதேசத்தை நம்பியே வீதியில் உள்ளோம் என முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக இன்று 480 ஆவது நாளாக போராட்டம் நடாத்திவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக தமது உறவுகளை மீட்பதற்காக கூடாரம் அமைத்து  கடந்த வருடம் மார்ச் மாதம் 8 ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று  480 ஆவது நாளாகவும் இடம்பெற்றுவருகிறது

தற்போது ஜெனீவாவில் நடைபெற்றுவரும்  அமர்வுகளில் தமது பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ள நிலையில் உறவுகள் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்

இந்நிலையில் இன்று கிளிநொச்சியில் உறவுகள் 498 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் நாளை மறுதினம் ஞாயிற்றுகிழமை தமது 500 ஆவது நாளில் தமது பாரிய  போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அறியமுடிகின்றமை குறிப்பிடத்தக்கது.

உறவுகள்காணாமல் ஆக்கப்பட்டோர்சர்வதேசம்போராட்டம்முல்லைத்தீவு
Comments (0)
Add Comment