உலகின் பல நாடுகளிலும் பல்வேறு காரணங்களால் காணாமற்போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இத்தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
கொஸ்டாரிக்காவில் 1981 இல் தொடங்கப்பட்ட கைதாகிக் காணாமற்போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு என்ற அரச சார்பற்ற அமைப்பினால் இலத்தீன் அமெரிக்காவில் இரகசியமான முறையில் கைது செய்யப்படலை எதிர்த்து இக்கோரிக்கை முதன் முதலில் விடுக்கப்பட்டது.
சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குறிப்பாக சர்வதேச மன்னிப்புச் சபைஇ மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன இந்த இரகசியக் கைதுகளுக்கு எதிராக அதிக அக்கறையும் கரிசனையும் செலுத்தி செயற்படுகின்றன.
இலங்கையில் நடந்த இனப்பிரச்சினை மற்றும் யுத்தத்தினால் பல்லாயிரக் கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர்.
குறிப்பாக முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் பின்னர் ஒன்ரறை லட்சம் மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்பவில்லை. இவர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளனர்.
இலங்கையில் தமிழ் மக்கள் ஒடுக்கப்படுவதற்கும் அழிக்கப்படுவதற்கும் ஒர் உபாயமாக காணாமல் போகச் செய்தல் மேற்கொள்ளப்படுகின்றது.
காணாமல் போகின்றவர்கள் மரணமற்றவர்கள் என்பதைப் போல தொடர்ந்து தேடப்படுகின்றார்கள். அவர்களது குடும்பங்கள் அவர்களுக்காக காத்திருக்கின்றனர். கண்ணீர் வடிக்கின்றனர்.
இலங்கையில் காணாமல் போனவர்களை கண்டு பிடிக்கும் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகின்றது.
இலங்கையின் இனப்பிரச்சினையின் ஒடுக்குமுறையின் தீவிரத்தை காணாமல்; போகச் செய்தல்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன.